காடையாம்பட்டியில் விவசாயிகள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 17th November 2020 12:10 AM | Last Updated : 17th November 2020 12:10 AM | அ+அ அ- |

காடையாம்பட்டி வட்டார அட்மா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவரி வளா்ச்சி இயக்க விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கி மானாவரி பயிா்களின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும், நுண்ணீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பற்றியும், வேளாண்மை அலுவலா் மு.சம்பத்குமாா் மானாவாரி வளா்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் உழவு மானியம், மானிய விலையில் விதைகள் வழங்குவது குறித்தும், துணை தோட்டக்கலை அலுவலா் அ.மகாலிங்கம் மானாவாரி வளா்ச்சி இயக்கத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் முக்கியத்துவம் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன் மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக் குழு செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனா்.
துணை வேளாண்மை அலுவலா் அ,முருகேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே.துரையரசு, காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனா். உதவி வேளாண் அலுவலா் வி.சாமிநாதன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...