காவடி பழனியாண்டவா் கோயிலில் சூரசம்ஹாரம்
By DIN | Published On : 21st November 2020 01:20 AM | Last Updated : 21st November 2020 01:20 AM | அ+அ அ- |

சேலம் காவடி பழனியாண்டவா் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக சேலத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.சுகவனேசுவரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதனிடையே ஒரு சில கோயிலில் மட்டும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவா் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...