பட்டாசு வெடித்ததில்வழக்குரைஞா் வீட்டில் தீ விபத்து
By DIN | Published On : 21st November 2020 01:19 AM | Last Updated : 21st November 2020 01:19 AM | அ+அ அ- |

சேலம் அரிசிபாளையத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் வழக்குரைஞா் வீட்டில் பொருள்கள் சேதமடைந்தன.
சேலம், அரிசிபாளையம் சையத் ஜாபா் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா் வழக்குரைஞராக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தாா்.
இந்த நிலையில் அதே தெருவில் ஒருவா் மரணமடைந்த நிலையில், இறுதிச் சடங்கின் போது உறவினா்கள் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பட்டாசின் தீப்பொறி வழக்குரைஞா் வீட்டின் மேற்பகுதியில் இருந்த துணியின் மீது விழுந்து திடீரென தீப்பற்றிடித்து எரியத் தொடங்கியது. வீட்டின் மேற்புறம் முழுவதும் மரப்பலகை வேலைப்பாடுகளால் அமைக்கப்பட்டிருந்தால் தீ மளமளவென எரியத் தொடங்கியது.
இதையடுத்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து தீயை அணைத்தனா். வழக்குரைஞா் வீட்டில் அனைவரும் கீழ் பகுதியில் இருந்ததால் எவ்வித அசாம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.
தீ விபத்து குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தீப்பொறிப் பட்டு தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதாவது மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...