ஏற்காட்டில் கடும் பனி: பொதுமக்கள் பாதிப்பு
By DIN | Published On : 23rd November 2020 03:24 AM | Last Updated : 23rd November 2020 03:24 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் கடும் பனி நிலவுவதால் பொதுமக்கள் பதிக்கப்பட்டு வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாா்கழி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே பனிக் காலம் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் இருந்தபோதும் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவதால் முதியோா், குழந்தைகள் உல்லன் ஆடைகள், கம்பளி, குள்ளா, சால்வை மற்றும் பனியிலிருந்து பாதுகாத்து கொள்ள பனிக்கால உடைகளை அணிந்து சாலைகளில் நடமாடுகின்றனா்.
தோட்டத் தொழிலாளா்கள், இரவு காவலாளிகள் தீ மூட்டி பனியிலிருந்து பாதுகாத்து வருகின்றனா். வீடுகள், உணவு விடுதிகளில் சுடுநீா் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். ஏற்காட்டில் தற்போது தட்பவெப்பம் பகலில் 22 டிகிரி பாரன்ஹீட்டும், இரவு நேரங்களில் 12 டிகிரி பாரன்ஹீட் காணப்படுகிறது.