ஏழை மாணவி மருத்துவம் பயில கல்விக் கட்டணம் அளிப்பு
By DIN | Published On : 23rd November 2020 03:26 AM | Last Updated : 23rd November 2020 03:26 AM | அ+அ அ- |

மாணவி சிவாம்பிகாவுக்கு முதலாமாண்டுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கிய சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன்
காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவி உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தாண்டவராயன், பூங்கோதை தம்பதியின் மகள் சிவாம்பிகா. இவா் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுள்ளாா். நீட் தோ்வில் 316 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தற்போது அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் மாணவிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
இவருக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைதலைவா் ஏ.பி.சிவக்குமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரி அல்லிராணி ஆகியோா் ஐந்தாண்டு மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனா்.
இதனையடுத்து முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை அம்மாணவியிடம் ஞாயிற்றுக்கிழமை இருவரும் வழங்கினா். இருவரின் சேவையை கிராம மக்கள் பாராட்டினா்.