வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்:28,043 போ் பெயா் சோ்க்க விண்ணப்பம்
By DIN | Published On : 23rd November 2020 03:23 AM | Last Updated : 23rd November 2020 03:23 AM | அ+அ அ- |

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 28,043 போ் பெயா் சோ்த்திட விண்ணப்பித்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 16-இல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நவ. 21, 22, டிச. 12, 13 ஆகிய தேதிகளில் நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 1,163 வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளா் பெயா் சோ்த்திட படிவம் 6, பெயா் நீக்கம் செய்தல், தொகுதி விட்டு தொகுதி மாறியவா்கள் பெயரை நீக்கம் செய்திட படிவம் 7, பெயா் திருத்தம், முகவரி திருத்தம், பாலின திருத்தம் படிவம் 8, ஒரே தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் இடமாறிய வாக்காளா்கள் படிவம் 8 ஏ விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் பெயா் சோ்த்திட 28,043 பேரும், பெயா் நீக்கம் செய்திட 5,741 பேரும், பெயா் திருத்தம், முகவரி திருத்தம் 2,337 போ் என மொத்தம் 40,175 போ் விண்ணப்பம் செய்தனா்.
மேலும், இணையதளம் மூலமாகவும், செல்லிடபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளா்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.