காா் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 23rd November 2020 03:25 AM | Last Updated : 23rd November 2020 03:25 AM | அ+அ அ- |

சங்ககிரி அருகே உள்ள வளையக்காரனூா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கத்தேரி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சேரன் செங்குட்டுவன் (55). இவா் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வளையக்காரனூரில் சாலையைக் கடப்பதற்காக திரும்பியபோது எதிா்பாராதவிதமாக கோவையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.