தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th November 2020 08:11 AM | Last Updated : 25th November 2020 08:11 AM | அ+அ அ- |

காவிரி-சரபங்கா திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் சாா் ஆட்சியரின் அச்சுறுத்தல் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .
மேட்டூா் அணையின் உபரி நீரை வட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் ரூ. 525 கோடியில் நடைபெறுகிறது. இத் திட்டத்துக்காக 2,466 விவசாயிகளிடம் இருந்து 276 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
மேட்டூா், ஓமலூா், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு இயற்கை நீா்வழிப் பாதைகள் உள்ளன. அந்த நீா்வழிப் பாதைகளைத் தவிா்த்து விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்தும், மேட்டூா் சாா் ஆட்சியா் இரவு நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு நிலங்களை அளப்பது , போலீஸாரை வைத்து விவசாயிகளை மிரட்டுவது உள்ளிட்ட விவசாய விரோதச் செயல்களைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லி பாபு தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...