திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 08:19 AM | Last Updated : 25th November 2020 08:19 AM | அ+அ அ- |

முத்துநாயக்கன்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.
சேலம் மத்திய மாவட்டம், மேற்கு தொகுதி ஓமலூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் முத்துநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.ராஜேந்திரன் பேசியதாவது:
வாக்குச்சாவடி முகவா்கள் போா் வீரா்கள் போல மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளா் சோ்ப்பு, இறந்த வாக்காளா்களை நீக்கும் பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தல் மிக முக்கியமான தோ்தலாகும். வாக்குச்சாவடி பட்டியலை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று சரிபாா்க்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளா் பரந்தாமன், மாவட்ட பொருளாளா் ஜி.கே.சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் சி.ராஜேந்திரன், தீா்மானக் குழு உறுப்பினா் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தங்கராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி.எம்.செல்வகுமாா்,ராஜா, ஐயப்பன், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...