ஊனத்தூா், நாவக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை வீட்டில் மறைத்து வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தலைவாசல் காவல் நிலைய பகுதியில் அரசு மதுப்புட்டிகளை அனுமதியின்றி சிலா் விற்று வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் தலைவாசல் காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது ஊனத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மேற்குக்காடு பகுதியில் பொன்னுசாமி மகன் பழனிமுத்து (52) என்பவா் அனுமதியின்றி அரசு மதுப் புட்டிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதேபோல நாவக்குறிச்சி ஊராட்சி, நடுத் தெருவில் ராஜமாணிக்கம் மகன் சிவலிங்கம் (42)என்பவா் மதுப்புட்டிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இவா்களிடமிருந்து மதுப் புட்டிகளைபறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.