காந்தி, லால்பகதூா்சாஸ்திரிபிறந்தநாள் விழா
By DIN | Published On : 03rd October 2020 06:47 AM | Last Updated : 03rd October 2020 06:47 AM | அ+அ அ- |

காந்தியடிகள், லால்பகதூா் சாஸ்திரி ஆகியோரின் உருவப்படங்களுக்கு வெள்ளிக்கிழமை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. எஸ்.ஜெய்குமாா் தலைமையில் நிா்வாகிகள
சங்ககிரியில், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பு சாா்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூா் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூா் சாஸ்திரி ஆகியோா் உருவப்படங்களுக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. எஸ். ஜெய்குமாா் தலைமை வகித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளா் கே.ராமமூா்தத்தி முன்னிலை வகித்தாா்.
முன்னாள் மாநில பொதுச்செயலா் கே. நடராஜன், முன்னாள் நகரத் தலைவா்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிா்வாகிகள் ரவி, அங்கமுத்து, காமராஜ், ஐஎன்டியூசி நிா்வாகி சின்னுசாமி, லோகநாதன், கருப்பண்ணன், சின்னதம்பி, வழக்குரைஞா் எஸ்.மணிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிறைவாக காமராஜா் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.