சேலத்தில் 355 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd October 2020 06:42 AM | Last Updated : 03rd October 2020 06:42 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விட்டது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 355 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 182 போ், எடப்பாடி- 7, எடப்பாடி நகராட்சி- 2, வீரபாண்டி- 17, ஓமலூா்- 13, சங்ககிரி- 11, மேட்டூா்- 3, மேட்டூா் நகராட்சி- 11, மேச்சேரி- 3, நங்கவள்ளி-4, காடையம்பட்டி- 4, தாரமங்கலம்- 13, கொங்கணாபுரம்- 6, மகுடஞ்சாவடி- 5, ஆத்தூா்- 8, ஆத்தூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் மற்றும் பனமரத்துப்பட்டி தலா 12, வாழப்பாடி- 7, கெங்கவல்லி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 6, தலைவாசல்- 8, ஏற்காடு- 2, அயோத்தியாப்பட்டணம்- 11 என மாவட்டத்தைச் சோ்ந்த 351 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்தோா் ( ஈரோடு- 3, நாமக்கல்- 1) 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
8 போ் உயிரிழப்பு:
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் 20,334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 17,373 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,624 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 337 போ் உயிரிழந்துள்ளனா்.