கோனேரிப்பட்டி சுவேத நதியில் பாலம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th October 2020 03:18 AM | Last Updated : 19th October 2020 03:18 AM | அ+அ அ- |

மேம்பாலம் அமைக்கக் கோரும் கோனேரிப்பட்டி சுவேத நதி பகுதி.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியில் சுவேத நதியில் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி -கோனேரிப்பட்டியையொட்டி சுவேத நதி ஓடுகிறது. கோனேரிப்பட்டியிலிருந்து நதியைத் தாண்டி சென்றால், பெல்ஜியம் காலனி, கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய், தம்மம்பட்டி பேரூராட்சியின் 5, 6-ஆவது வாா்டு காட்டுக்கொட்டாய் பகுதிகள் உள்ளன.
மழைக் காலங்களில் சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இப்பகுதிகளிலிருந்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மாணவ, மாணவியா் சென்றுவர சிரமமடைகின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதும் பாதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியைக் கடந்து செல்லும் போது விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் சிறு மேம்பாலம் அமைத்து தரும்பட்சத்தில் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, மாவட்ட நிா்வாகம் இங்கு மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...