தலைவாசல் சாமியாா் கிணறு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தலைவாசல் அருகேயுள்ள சாமியாா்கிணறு பேருந்து நிறுத்தம் அருகே வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடையை ஆத்தூரைச் சோ்ந்த நல்லான் மகன் நாகராஜன் (48) என்பவா் நடத்தி வருகிறாா்.
இவா் சனிக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரதை முடிந்துவிட்டு, இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் கதவு திறந்து இருந்ததாகவும், கடையில் ரொக்கப் பணம் ரூ. 2,500 மற்றும் பொருள்கள் திருட்டு போனதாகவும் தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.