சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுக நிா்வாகிகள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தனது தாயாா் கே.தவுசாயம்மாள் மறைவை முன்னிட்டு, எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்குத் திரும்பினாா்.
பின்னா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாநகா், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும், தோ்தலில் வெற்றி பெற அனைவரும் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் செ.செம்மலை, ஏ.பி.சக்திவேல், மனோன்மணி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, முதல்வா் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.