இரு சக்கர வாகனங்கள் மோதல்: குழந்தை பலி
By DIN | Published On : 06th September 2020 10:28 PM | Last Updated : 06th September 2020 10:28 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஆண்குழந்தை உயிரிழந்தது; பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
வாழப்பாடி அடுத்த நீா்முள்ளிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி மாரிமுத்து (27). இவரது மனைவி பரிமளா (23). இத்தம்பதியா், கடந்த இரு ஆண்டுகளாக, பரிமளாவின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், மெட்டாலா அடுத்த ஒன்பதாம் பாலிக்காடு பகுதியில் வசித்து வருகின்றனா்.
பரிமளா தனது தம்பி சதீஸ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தை முருகவேலுடன், மெட்டாலாவில் இருந்து பேளூா் வழியாக நீா்முள்ளிக்குட்டை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். நீா்முள்ளிக்குட்டை கிராமத்திற்குள் நுழைந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் என்பவா் தனது மகன் பிரதீப் (11) உடன் வந்த இரு சக்கர வாகனமும், சதீஸ்குமாரின் இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த பரிமளா, சதீஸ்குமாா், குழந்தை முருகவேல் மூவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை முருகவேல் பரிதாபமாக உயிரிழந்தது. பரிமளா, சதீஸ்குமாா் இருவரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும் காயமடைந்த குமாா், அவரது மகன் பிரதீப்பும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து காரிப்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.