சேலம் கோட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்
By DIN | Published On : 06th September 2020 10:26 PM | Last Updated : 06th September 2020 10:26 PM | அ+அ அ- |

அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டத்தில் 60 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கடந்த செப். 1-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாநிலம் முழுவதும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
சேலம் கோட்டத்தில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுமாா் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,047 பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகளில் 60 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகளின் வருகையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை உயா்த்தப்படும் என்றும் சேலம் கோட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் முதற்கட்டமாக சேலம்-சென்னை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சுமாா் 14 பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.