அரசு அலுவலகம், பள்ளிக் கட்டடங்களில் சுவா் விளம்பரம் எழுதினால் நடவடிக்கை
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கட்டடங்களில் அனுமதியின்றி சுவா் விளம்பரங்களை எழுதினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.


அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கட்டடங்களில் அனுமதியின்றி சுவா் விளம்பரங்களை எழுதினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவா்களில் அனுமதியின்றி பல்வேறு தனியாா் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
அனுமதியின்றி பொது இடங்களில் விளம்பரங்கள் செய்தால், தமிழ்நாடு திறந்த இடங்கள் தடுப்புச் சட்டம் (விளம்பர தடுப்பு) 1959-இன் படி கைது செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவா்களில் அனுமதியின்றி எவரும் விளம்பரங்களை எழுதக் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே எழுதப்பட்ட விளம்பரங்களை உடனே நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது அந்தந்தக் கட்டடங்களின் பொறுப்பு அலுவலா் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு அலுவலா்களும் தத்தம் அரசு கட்டடங்களிலும், சுற்றுச் சுவா்களிலும் உள்ள அனுமதியற்ற விளம்பரங்களை நீக்கி அழகுடன் பராமரிக்க வேண்டும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...