சேலம்: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே.கே. உதயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
சேலம்: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே.கே. உதயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

தலைமையாசிரியர் வி. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி தலைமையாசிரியர் எம்.சாமுவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

துணைத் தலைவர் விக்டர், உறுப்பினர்கள் செந்தில், சார்ட் ஆர்.ரவி நாராயணன் சம்பத்குமார் பர்கத் அலி உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 

தலைமையாசிரியை பொன்முடி தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைத் தலைவர் பூமாலை நாயக்கர், உறுப்பினர்கள் வேலுமணி கார்த்தி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com