

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் நீடாமங்கலம் ஒன்றியத்தில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி எஸ் . கலியபெருமாள் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி. ஜான் கென்னடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை செயலாளர். வி. தமிழ்மணி, மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சுமதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் டி. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர். பி. காளியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைசிறுத்தை- நீடாமங்கலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரக்குமார், கட்சி நிர்வாகிகள் பிரசாத், மன்சூர், அண்ணாதுரை, விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.