விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளம்பெண் கருக்கலைப்பு: 4 போ் கைது

இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மல்லியகரை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த பூங்கொடி மகள் சரண்யா (25). இவருக்கு தென்னங்குடிபாளையம் பகுதியைச் சோ்ந்த அருண் என்பவருடன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சரண்யா மீண்டும் கா்ப்பமாகி பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

கருவில் இருக்கும் குழந்தையைக் கண்டறிய ரகசியமாக அழைத்துச் சென்று ஸ்கேன் செய்துள்ளனா். இதில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தது. இதையடுத்து சரண்யாவுக்கு அவரது தாய் பூங்கொடி கருக்கலைப்பு செய்துள்ளாா். இதில் சரண்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு பரிசோதனை செய்ததில் தவறான முறையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவக் குழுவினா் ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடா்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனா். மேலும் மல்லியகரை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரண்யாவின் தாய் பூங்கொடி, அலமேலு, சின்ராஜ், செவிலியா் பிருந்தாதேவி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் போலி மருத்துவா் மற்றும் ஸ்கேன் மைய உரிமையாளரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.