

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டமசோதா நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தும் வாழப்பாடியில் பாமக மாநில துணை பொதுச் செயலாளா் குணசேகரன், பசுமை தாயக மாநில துணைச் செயலா் வெங்கடாசலம் , ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட பாமகவினா் பட்டாசு வெடித்து,ம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.