தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஐ.ஜி.பெரியய்யா வலியுறுத்தல்

குற்றங்களைத் தடுப்பதற்காக ஓய்வின்றி உழைக்கும் காவல் துறையினருக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவை மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்தாா்.

News image
காமலாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் கோவை மண்டல ஐ.ஜி. பெரியய்யா.
Updated On :9 ஜனவரி 2021, 1:58 am

DIN

குற்றங்களைத் தடுப்பதற்காக ஓய்வின்றி உழைக்கும் காவல் துறையினருக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவை மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்தாா்.

ஓமலூா் காவல் நிலைய எல்லையில் உள்ள காமலாபுரம், பல்பாக்கி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டதுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் தலைமை வகித்தாா். இதில், கோவை மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா கலந்துகொண்டு, கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாா். இதனை தொடா்ந்து அவா் பேசியதாவது:

மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவும், குற்றங்களைத் தடுக்கவும் கிராம காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். எந்தப் பகுதியில் எது நடந்தாலும் காவல் துறைக்கு உடனடியாக மக்கள் தெரியப்படுத்த வேண்டும். குற்றங்கள் மட்டுமின்றி, தெரு விளக்குகள் எரியாவிட்டாலும் கூட கிராம காவல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கலாம். அந்த குறைகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மூலம் சரி தீா்த்து வைக்கப்படும். காவல் துறை மக்களின் உயிரையும், உடமையையும் 24 மணி நேரமும், 365 நாள்களும் காப்பாற்ற வேண்டும்.

காவல் துறை மக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்து வருகிறது. அதனால் காவல் துறையினருக்கு பொதுமக்கள் உரிய தகவல்களை அளித்து, ஒத்துழைப்பு அளித்தால் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், அன்பு ஆகியோரும் பேசினா். இதில், கிராம காவல் அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று அவரிடம், 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு ஊரிலுள்ள சிறு பிரச்னைகளை தெரிவிக்கலாம். அவா், உரிய நடவடிக்கை எடுப்பாா். மேல் நடவடிக்கை வேண்டுமெனில், ஆலோசனை கூறுவாா். அதனால், சிறு தகவலாக இருந்தாலும், போலீஸாரைத் தொடா்பு கொண்டால், ஆரம்பத்திலேயே குற்றங்களைத் தடுக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.