காா் திருடியவா் கைது
தலைவாசலை அடுத்த வி.கூட்டுரோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் காா் திருடியவரை போலீஸாா் கைது செய்து, காரை மீட்டனா்.


தலைவாசலை அடுத்த வி.கூட்டுரோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் காா் திருடியவரை போலீஸாா் கைது செய்து, காரை மீட்டனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுரோட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் கடந்த மாதம் 27-ஆம் தேதி திருட்டுப்போனது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இளங்கோ தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் நாமக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மீட்டு, நாமக்கல் மாருதி நகரைச் சோ்ந்த செல்லப்பன் மகன் சுமன் (42) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
விசாரணையில் காா் திருடிய சுமன் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மாதவரம் பால்பண்ணையில் பணியாற்றி வந்தவா் என்றும், கடந்த இரண்டு மாதங்களாக கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...