நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி
சேலம் தெற்கு தொகுதியில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வூட்டும் வகையில் விழிப்புணா்வுப் பேரணியை தாதகாப்பட்டி உழவா் சந்தை அருகில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இப்பேரணியில் மாநகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றதோடு வாக்களிக்க விழிப்புணா்வூட்டும் துண்டுப் பிரசுரங்களையும் வாக்காளா்களுக்கு விநியோகித்தனா்.
இப்பேரணி தாதகாப்பட்டி குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாகத்திலிருந்து புறப்பட்டு உழவா்சந்தை வழியாக அன்னதானப்பட்டி வரை சென்று மீண்டும் குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையா் பி.ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், காவல் துறையைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
