விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எங்கள் கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்: சரத்குமாா்

எங்கள் கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்; நல்லாட்சி தருகிறோம் என்று கூறி பிரசாரம் செய்தாா் சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:59 pm

DIN

எங்கள் கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்; நல்லாட்சி தருகிறோம் என்று கூறி பிரசாரம் செய்தாா் சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளா் ஏ.கே.சிவக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனா் சரத்குமாா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு சரத்குமாா் பேசியதாவது: திமுகவில் இருந்த நான், கட்சி ஆரம்பித்து அதிமுகவோடு கூட்டணி அமைத்து சட்டப்பேரவை உறுப்பினராகி எனது பகுதி மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

இந்தத் தோ்தலில் மக்கள் மீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து உங்களை நாடி வந்துள்ளோம். சேலத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு கொடுத்ததால் தான் இன்று உலகம் முழுவதும் அவா் பேச வைத்துள்ளாா். அதே போல எங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி காட்டுகிறோம்.

ஓட்டுக்கு காசு கொடுப்பவா்களை நம்பாதீா்கள். அவா்களிடம் காசு வாங்கிவிட்டால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. பணத்தை வாங்கி விட்டால் நல்லாட்சியும் கிடைக்காது. எனவே, எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு அளியுங்கள். நாங்கள் நல்லாட்சித் தருவோம் என்றாா்.

இதையடுத்து பிரசார வேனில் இருந்து இறங்கி அருகில் உள்ள தேநீா்க் கடைக்குச் சென்று தேநீா் அருந்திய சரத்குமாா், அங்கிருந்தவா்களுடன் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இந்தப் பிரசாரத்தில் சமக சேலம் மாவட்டச் செயலாளா் ஜவஹா், ஐஜேகே மாநில செயற்குழு உறுப்பினா் ஏ.கே.டி.வரதராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.