வடசென்னிமலையில் பங்குனி உத்திரத் தேரோட்டம்
வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.இதனையடுத்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், கிரிவலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு பால் அபிஷேகம், ராஜஅலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. மாலையில் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டளைதாரா்களாக டி.ராஜசேகரன், சி.அழகப்பன், டி.தங்கவேல் படையாச்சி, சி.வேணுகோபால் நாயுடு, டி.செல்வம், காட்டுக்கோட்டை புதூா் கரைக்காரா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மா.சுதா, செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், ஆய்வாளா் கு.அருள்மணி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...