எடப்பாடி அருகே கால்வாய் நீருக்கு பூஜை செய்து வழிபாடு செய்த விவசாயிகள் 

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி பகுதிக்கு வந்தடைந்தது. அப்பகுதி விவசாயிகள் கால்வாயில் மலர் தூவி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.   
எடப்பாடி அருகே கால்வாய் நீருக்கு பூஜை செய்து வழிபாடு செய்யும் விவசாயிகள்.
எடப்பாடி அருகே கால்வாய் நீருக்கு பூஜை செய்து வழிபாடு செய்யும் விவசாயிகள்.

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி பகுதிக்கு வந்தடைந்தது. அப்பகுதி விவசாயிகள் கால்வாயில் மலர் தூவி பூஜை செய்து வழிபாடு செய்தனர். 
ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்கள்களில், பாசனத்திற்காக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரையிலான 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டில் நேற்று மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மதகுகளை திறந்து வைத்தார். 

வினாடிக்கு 300 கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், இன்று காலை எடப்பாடி அடுத்த பில்லுக் குறிச்சி பகுதிக்கு வந்தடைந்தது. பூஜை செய்து வரவேற்ற விவசாயிகள் இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் நடப்பாண்டில் விவசாயம் செழித்திட வேண்டி கால்வாய் நீரில் மலர்கள் தூவி பூஜை செய்தனர். மேலும் கால்வாய் கரைப்பகுதியில் பொங்கலிட்டு காவிரித் தாய்க்கு படையல் செய்தனர். 
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த உழவர் பாதுகாப்பு குழு உறுப்பினர் எம்.ஆர்.நடேசன் கூறுகையில்: மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் மூலம், சேலம், நாமக்கல் மாவட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் சுமார் 10 டி.எம்.சி தண்ணீர் வரை திறக்கப்படுவது வழக்கம்.


நடப்பாண்டில் அரசு உரிய நேரத்தில் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்ததுள்ளது, இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கிழக்கு கரை கால்வாயில் தடையற்ற தண்ணீர் விநியோகம் இருந்துவரும் நிலையில், நடப்பாண்டில் இப்பகுதியில் கூடுதலான நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com