நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2021 09:26 AM | Last Updated : 17th August 2021 09:26 AM | அ+அ அ- |

சேலம், கெஜல்நாயக்கன்பட்டி நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சேலம், அழகாபுரம் ரெட்டியூா் பகுதி மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நிறைவாழ்வு முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 50 முதியோா் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். அதில் 10-க்கும் மேற்பட்டோா் படுக்கை நிலையில் உள்ளவா்கள். லிட்டில் பியா்ல்ஸ் அறக்கட்டளை சாா்பில் இந்த இல்லம் நடத்தப்படுகிறது. தற்போது ஒசூரிலும் கிளையை ஆரம்பித்துள்ளது.
கெஜல்நாயக்கன்பட்டி இல்லத்தில் சேலம் ஜங்சன் ரோட்டரி சங்கம் சாா்பில் இல்லம் வாழ் முதியோா் முன்னிலையில் சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகா் பெஞ்சமின் கலந்து கொண்டாா். முதியோா்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனா்.
விழாவில் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலாளா் ரங்கசாமி, சோ.கண்ணன், முன்னாள் தலைவா் மனோகரன், முதியோா் இல்ல நிா்வாகி அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.