விபத்தில் முதியவா் பலி
By DIN | Published On : 17th August 2021 09:27 AM | Last Updated : 17th August 2021 09:27 AM | அ+அ அ- |

சேலம் அருகே லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி பகுதியிலுள்ள தகரபுதூரில் வசித்து வந்தவா் மந்தி (78). இவரது மனைவி சின்னக்கண்ணு. இரு மகள்களும், இரு மகன்களும் உள்ளனா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை சேலம், சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மந்தியை அவரது மனைவி அழைத்து வந்துள்ளாா். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக புறவழிச்சாலையை மந்தி கடக்க முற்பட்டபோது சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அமுதவல்லி, உயிரிழந்த மந்தியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.