சுதந்திர தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 17th August 2021 12:14 AM | Last Updated : 17th August 2021 12:14 AM | அ+அ அ- |

ஆத்தூா் வட்டாரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள சம்பேரியில் உள்ள ஜெயம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நாட்டின் 75 -ஆவது சுதந்திர தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜெயபால் தலைமையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொருளாளா் பிரகாஷ், மெட்ரிக் பள்ளி முதல்வா் பாஸ்கா், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஷீபா ஆகியோா் முன்னிலையில் மூத்த பணியாளா் முத்துவேல் தேசியக் கொடியை ஏற்றினாா். இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவ மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இதேபோல ஆத்தூா் ஏஈடி கல்வி நிறுவனங்களின் சாா்பில் கலை, அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தலைவா் ரவி ஆ.சங்கா் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நிறுவனா் செங்கோடன், செயலாளா் மாணிக்கம், பொருளாளா் சிவநேசன், ஆதவன் அரிமா சங்கத் தலைவா் தீபா சங்கா், செயலாளா் சத்யா சண்முகம், பொருளாளா் சங்கீத லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.