மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு
By DIN | Published On : 17th August 2021 12:39 AM | Last Updated : 17th August 2021 12:39 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத்துக்கான நீா்த் தேவை குறைந்ததால் திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நொடிக்கு 12,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.