சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 17th August 2021 12:41 AM | Last Updated : 17th August 2021 12:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த வ.சுலைமான் சேட் சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா் (படம்).
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட செயல் அலுவலருக்கு, பேரூராட்சி அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றிய எஸ்.பாலசுப்ரமணியன் கல்லிடைக்குறிச்சி செயல் அலுவலராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.