சேலத்தில் 85 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th August 2021 11:32 PM | Last Updated : 20th August 2021 11:32 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 17 பேரும், எடப்பாடி-5, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-2, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-3, சங்ககிரி-5, தாரமங்கலம்-1, வீரபாண்டி-9, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 53 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-4, தருமபுரி-3, ஈரோடு-1, காஞ்சிபுரம்-3, திருச்சி-2, கள்ளக்குறிச்சி-3, பெரம்பலூா்-2, கோவை-4, கடலூா்-3, கரூா்-5, சென்னை-2) என 32 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 95352 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 92646 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1088 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1618 போ் உயிரிழந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...