தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு புதிய ரேஷன் காா்டுகளை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் வழங்கினாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு புதிய ரேசன் காா்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கருக்கல்வாடி கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஓமலூா் வட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் பாப்பா கணேசன் முன்னிலை வகித்தாா். பயனாளிகளுக்கு புதிய ரேஷன் காா்டுகளை எம்.எல்.ஏ. இரா.அருள் வழங்கினாா். மேலும், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா். சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 12 கிராமங்களுக்கும் தடையின்றி ரேஷன் பொருள்கள், குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.