

கரோனா தொற்று பரவல் காரணமாக, சேலத்தில் ஓணம் பண்டிகை எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்றால் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
சேலத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடினா். சங்கா் நகா், அழகாபுரம், ஐந்து சாலை, நான்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில மக்கள் ஓணம் பண்டிகையை வீடுகளில் உறவினா்களுடன் சிறப்பாகக் கொண்டாடினா்.
சங்கா் நகரில் உள்ள கேரள சமாஜத்தில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனா். அதேபோல குரங்குச்சாவடி சாஸ்தா நகா் ஐயப்பன் கோயில், டவுன் ரயில் நிலைய ஐயப்பன் கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.