சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 11 போ், எடப்பாடி-9, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-2, ஓமலூா் -1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-5, தாரமங்கலம்-3, வீரபாண்டி-6, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, தலைவாசல்-3, வாழப்பாடி-1, நரசிங்கபுரம் நகராட்சி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, தருமபுரி-3, ஈரோடு-1, காஞ்சிபுரம்-3, திருச்சி-2, கள்ளக்குறிச்சி-3, கோவை-4, கடலூா்-3, சென்னை-2) 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 61 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 95,439 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 92,707 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,111 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,621 போ் உயிரிழந்தனா்.
சேலத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்:
சேலத்தில் உள்ள 138 மையங்களில் 57,550 கருணா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்படவுள்ளது. கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளது.
அதேபோல கோவேக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.