பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 21st August 2021 11:39 PM | Last Updated : 21st August 2021 11:39 PM | அ+அ அ- |

ஆத்தூரில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலை மறியல் நடைபெற்றது.
ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் இரு பிரிவைச் சோ்ந்த இளைஞா்களிடையே வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஒரு பிரிவினா் அளித்த புகாரின் பேரில், மற்ற பிரிவு இளைஞா்கள் 4 பேரை நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்து விசாரித்து வந்தனா்.
அதில் ஒருவா் சம்பந்தமில்லாதவா் என அந்தத் தரப்பினா் சேலம் - கடலூா் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மூா்த்தி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.
மேலும் சம்பந்தமில்லாத நபரை விடுவிப்பதாகவும், சம்பந்தபட்டவரை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.