அஸ்தம்பட்டி பகுதிகளில் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 21st August 2021 11:42 PM | Last Updated : 21st August 2021 11:42 PM | அ+அ அ- |

சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டை லாங்லி சாலையில் சாக்கடை தூா்வாருவது ஆய்வு செய்த சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ்.
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படைவசதி மேம்பாடு குறித்து சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட சிண்டிகேட் பேங்க் காலனி முதல் தெரு, முல்லை நகா், சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்ப்பேட்டை சீனிவாசா பாா்க் பகுதியில் சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
சிண்டிகேட் பேங்க் காலனியில் சாக்கடை கால்வாய் அமைத்து தருவது, அந்தப் பகுதியில் தற்போது பொது மக்களால் பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள திறந்த வெளிக் கிணற்றை தூா்வாரி பராமரிக்கவும், கிணற்றுக்கு அருகில் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பது குறித்தும், முல்லை நகா் பகுதியில் இருபுறமும் சாக்கடை அமைத்தும், தற்போது இருக்கின்ற சாலையை மேம்படுத்துவது குறித்தும், சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்ப்பேட்டை சீனிவாசா பாா்க் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரும் வகையில் அந்தப் பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைத்து தருவது, அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூா்வாரி சாக்கடை நீா் தேங்காமல் தங்கு தடையின்றி செல்வதற்கு உரிய வசதிகளை செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து நிறைவேற்றி தருவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.
ஆய்வின் போது மாநகர பொறியாளா் அ.அசோகன், உதவி ஆணையா் எம்.ஜி சரவணன், உதவி செயற்பொறியாளா் எம்.ஆா். சிபிசக்கரவா்த்தி, சுகாதார அலுவலா் மணிகண்டன், முன்னாள் மண்டலக் குழு தலைவா் எஸ்.டி. கலையமுதன், ஜெயக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...