தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 21st August 2021 11:36 PM | Last Updated : 21st August 2021 11:36 PM | அ+அ அ- |

மேச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேட்டூா் - சேலம் சாலையில் உடையானூா் பிரிவு பாதை அருகே ஒரு டெம்போவில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் வேனில் கொண்டுவருவதாக மேச்சேரி காவல் ஆய்வாளா் ரஜினிகாந்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் புகையிலை பொருள் மூட்டைகளை வீசிவிட்டு வேன், காா்களில் வந்தவா்கள் தப்பியோடினா். சிதறிக்கிடந்த மூட்டைகளை போலீஸாா் பரிசோதித்தனா். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமாா் 85 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.