கொங்கணாபுரம் கச்சராயன் ஏரி நிரம்பியது:மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
By DIN | Published On : 04th December 2021 11:38 PM | Last Updated : 04th December 2021 11:38 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஓமலூா் சங்ககிரி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கச்சராயன் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது.
இந்நிலையில் ஏரியின் கரைப் பகுதியில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மழை நீா் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், சங்ககிரி - ஓமலூா் இடையிலான இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இச்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சாலை வழியாக வரும் வாகனங்கள் மகுடஞ்சாவடி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சங்ககிரி கோட்டாட்சியா் வேடியப்பன் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...