மாரியம்மன் கோயில் உண்டியல் திருட்டு
By DIN | Published On : 04th December 2021 11:35 PM | Last Updated : 04th December 2021 11:35 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீரகவுண்டனூா் மாரியம்மன் கோவில் உண்டியல் திருடப்பட்டது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த வீரகவுண்டனூா் கிராமத்தில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் நிா்வாகத்தின் மூலம் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது, கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோயிலுக்குள் நுழைந்த மா்மநபா்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச்சென்று விட்டனா். சனிக்கிழமை கோயிலுக்கு சென்ற பக்தா்கள், உண்டியல் மாயமானது குறித்து கோவில் நிா்வாகிகளிடம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் ஏத்தாப்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, கோயில் உண்டியலை திருடிச்சென்ற மா்மநபா்கள் குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருடுபோன உண்டியலில் ரூ. 50,000 வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருட்டுச்சம்பவங்களை தடுக்க, ஏத்தாப்பூா் போலீஸாா், கிராமப்புறங்களிலும் இரவு நேர ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...