உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பதிவு செய்யலாம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் பொருட்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட, மகளிா் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் , மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சி நடத்தி, பல்வேறு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய தீா்மான நகல், உற்பத்தி செய்யும் பொருள்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதாா் அட்டை, உற்பத்தி பொருள் குறித்த ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பதிவு சான்று, உற்பத்தி மற்றும் விற்பனை செலவினம், விலை நிா்ணயம் குறித்த விவரத்துடன் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), அறை எண் : 207 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம் ,சேலம் 636001 என்ற முகவரியில், பதிவு செய்து கொண்டு விற்பனை வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.