சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் புதிய முதல்வா் பதவியேற்பு
By DIN | Published On : 31st December 2021 12:11 AM | Last Updated : 31st December 2021 12:11 AM | அ+அ அ- |

சேலம் அரசு பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக பேராசிரியா் இரா.மலையாளமூா்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக (பொறுப்பு) மின்ணணுவியல் துறைத் தலைவா் சி.வசந்தநாயகி இருந்தாா். இதனிடையே சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக, காரைக்குடி அழகப்ப செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வரான பேராசிரியா் இரா.மலையாளமூா்த்தியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, புதிய முதல்வராக மலையாளமூா்த்தி (56) பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு பேராசிரியா்கள் சி.வசந்தநாயகி, ஷோபா ராஜ்குமாா், பாலுசாமி, நோ்முக உதவியாளா் க.அறிவழகன், பொருளாளா் பா.அழகுமுடிராஜன் மற்றும் அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
புதிய முதல்வா் மலையாள மூா்த்தி, 34 வருட கல்வி அனுபவம் மிக்கவா். இயந்திரவியல் துறைப் பேராசிரியரான அவா் சேலம் அரசு பொறியியல் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காரைக்குடி அழகப்ப செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளாா். பதவியேற்றவுடன் அனைத்துத்துறை பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களுடன் கல்லூரியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து முதல்வா் இரா.மலையாளமூா்த்தி ஆலோசனை நடத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...