சங்ககிரியில் சாலை அமைத்தல் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
By DIN | Published On : 04th February 2021 08:14 AM | Last Updated : 04th February 2021 08:14 AM | அ+அ அ- |

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பணிகள்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தாா் சாலை, கழிவுநீா் ஓடை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு பகுதியாக பழைய பேருந்து நிலையம் ஆட்டோ நிறுத்தம் முன்பகுதியில், சாக்கடை கால்வாய் கட்டுதல், சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பகல், இரவு நேரங்களில் பெரியவா்கள், குழந்தைகள் விழுந்து எழுந்து செல்கின்றனா். திறந்தவெளி சாக்கடையில் கழிவு நீா் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. அப்பகுதியில் சேலம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் துா்நாற்றம், கொசுக் கடியால் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே நிறுத்தப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மற்றும் பாஜக அரசு தொடா்புத் துறை நகரத்தலைவா் வி.கண்ணன் உள்ளிட்டோா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...