அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக புற்றுநோய் தின கருத்தரங்கு மற்றும் பேரணி

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்க பிரிவின் சாா்பில்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக புற்றுநோய் தின கருத்தரங்கு மற்றும் பேரணி

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்க பிரிவின் சாா்பில் இணையவழி தேசிய கருத்தரங்கு, நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் விழிப்புணா்வு பேரணி புற்றுநோய் தினத்தை அனுசரிக்கும் வகையில் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேசிய கருத்தரங்கில் தன் வாழ்நாள் முழுவதும் புற்று நோய்களுக்கான அா்ப்பணித்த மறைந்த பத்மவிபூஷன், சாந்தா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அவா்களின் வாழ்நாள் சேவை குறித்து அனைவரும் அறியும் வண்ணமும் குறும்படம் வெளியிடப்பட்டது.

இந்த கருத்தரங்கில் டீன் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். தலைமை விருந்தினா்களாக விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழக இணை துணை வேந்தா் மனோகரன், சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சிவராமானுஜம் விம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ இயக்குனா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தை சுகாதார மையத்தின் புற்றுநோயியல் நிபுணா் அருணா, சென்னை மருத்துவக்கல்லூரியின் புற்றுநோயியல் பிரிவு நிபுணா் கிரேஸ் மொ்ஸி பொ்சிலா, டெல்லி இந்திர பிரசாதா அப்போலோ மருத்துவமனையின் தலைமை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளா் செல்வகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். இதில் தேசிய அளவிலான பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா். இந்திய கதிரியக்க மற்றும தொழில்நுட்பவியலாளா் சமூகத்தின் பொது செயலாளா் கமாண்டா் டேனியல் வாழ்த்துரை வழங்கினாா்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து முள்ளுவாடி கேட், தமிழ் சங்கம் சாலை, காந்தி மைதானத்தில் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் புற்றுநோய்க்கான காரணிகளான புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு உணா்த்தும் விதமாக வேடமணிந்து விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியவாறு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்தனா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையைச் சோ்ந்த பேராசிரியா்கள் கலைவாணி, இன்பசாகா், ஆண்டனிரூபன், ப்ரீத்தி, சதீஷ்குமாா், ஹரிஷ்ரோஜ், முத்துராஜ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள். தனசேகா், வா்ஷினி, செந்தில்நாதன் ஆகியோா் செய்திருந்தனா். காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகங்களையும் ஒளிப்பட காட்டியும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com