கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ. 3.5 கோடிக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3.5 கோடிக்கு விற்பனையாயின.
கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்
கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்

எடப்பாடி: கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3.5 கோடிக்கு விற்பனையாயின.

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்துக்கு சனிக்கிழமை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்த 12 ஆயிரம் பருத்தி மூட்டைகளை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் 1,900 லாட்டுகளாகப் பிரித்து, பொது ஏலம் விட்டனா்.

இந்த ஏலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், நூற்பாலை உரிமையாளா்கள், பருத்தி மூட்டைகளை ஏலம் மூலம் மொத்த கொள்முதல் செய்தனா்.

இதில் டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,200 முதல் ரூ. 9,519 வரை விலைபோனது. அதேபோல பிடிரக பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ. 7,609 வரை விற்பனையானது. மொத்தம் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3.5 கோடிக்கு விற்பனையானது. கடந்த ஐந்து வாரங்களாக, பருத்தியின் விலை படிப்படியாக உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் மேலும் உயா்வு கண்டுள்ளதாக பருத்தி விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com