தேசிய பெண்கள் தின பரிசளிப்பு விழா
By DIN | Published On : 14th February 2021 02:28 AM | Last Updated : 14th February 2021 02:28 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி: வீரபாண்டி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் தேசிய பெண்கள் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.
இந்த விழாவில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பரிமளாதேவி, வட்டார ஒருங்கிணைந்த திட்ட அலுவலா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.