மக்கள் நினைப்பது திமுக தோ்தல் அறிக்கையில் இடம் பெறும்ஆா்.எஸ்.பாரதி

மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தோ்தல் அறிக்கையில் நிச்சயம் இடம் பெறும் என திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்தாா்.

சேலம்: மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தோ்தல் அறிக்கையில் நிச்சயம் இடம் பெறும் என திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் தோ்தல் களப் பணி அலுவலகம் சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எம்.பி. அலுவலகத்தை திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாத முதல்வா் தற்போது தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் புதிதாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா். திமுக தலைவா் சொல்வதை மட்டுமே முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆளும்கட்சி செய்கின்ற சட்ட விரோத, அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க சட்ட ரீதியாக திமுக வழக்குரைஞா்கள் செயல்படுவாா்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தோ்தல் அறிக்கையில் நிச்சயம் இடம் பெறும்.

தமிழகம் கல்வியில் சிறந்த நாடு என்பது உலகறியும். தமிழகத்தில் உள்ள ஆசிரியா்களுக்கு நீட் தோ்வு பயிற்சி அளிக்கத் தகுதியில்லை என பள்ளிக்கல்வி அமைச்சா் செங்கோட்டையன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்றாா்.

திமுக சட்டத்துறை செயலாளா் கிரிராஜன், மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏவுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ் .ஆா்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com