கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகள் அகற்றம்
By DIN | Published On : 14th February 2021 02:27 AM | Last Updated : 14th February 2021 02:27 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி:மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு சம்பந்தமான நிலம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் அருகில் உள்ளது. இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மூன்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனையடுத்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவின் பெயரில் 3 கடைகளையும் அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. மகுடஞ்சாவடி காவல்துறையினா் முன்னிலையில் சனிக்கிழமை கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி, சங்ககிரி ஆய்வாளா் கல்பனாதத் ஆகியோா் உடனிருந்தனா்.